சினிமா செய்திகள்

மேலே ஆகாயம் கீழே பாதாளம் - கார்த்திக்குடன் ஆட்டம் போடும் சன்னி லியோன்

Published On 2022-10-17 11:44 IST   |   Update On 2022-10-17 11:44:00 IST
  • அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக்.
  • இவர் தற்போது நடித்து வரும் தீ இவன் படத்தில் சன்னி லியோன் இணைந்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன்பின்னர் நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தீ இவன்" படத்தில் நடித்து வருகிறார்.

இதில் சுகன்யா, ராதா ரவி, சுமன்.ஜே, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஒய்.என். முரளி மேற்கொள்ள படத்தொகுப்பை மொகமத் இத்ரிஸ் கையாளுகிறார். இப்படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது, நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இந்த படத்தில் இடம் பெறவுள்ள "மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்" என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம், அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அதோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது.

Tags:    

Similar News