ஏ.ஆர்.ரகுமான்
இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை - மோடியின் பதிவை ரீ-டுவிட் செய்த ஏ.ஆர்.ரகுமான்
- பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
- இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், 'சுராங்கனி' என்ற பாடலை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான்
மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி பதிப்பான மா துஜே சலாம் பாடலை ராணுவ வீரர்கள் பாடினர். இதனை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரீ-டுவிட் செய்துள்ளார். அதில், இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.