சினிமா செய்திகள்
மனதை மயக்கும் அழகியாக கங்கனா ரனாவத்.. வைரலாகும் போஸ்டர்

மனதை மயக்கும் அழகியாக கங்கனா ரனாவத்.. வைரலாகும் போஸ்டர்

Published On 2023-08-05 11:28 IST   |   Update On 2023-08-05 11:28:00 IST
  • ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’.
  • இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.



லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.


சந்திரமுகி 2 போஸ்டர்

இந்நிலையில், 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மனதை மயக்கும் அழகியாக கங்கனா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.





Tags:    

Similar News