நாடோடி மன்னன் தனுஷ்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போஸ்டர்..
- இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
வாத்தி
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'வாத்தி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் வரும் 17-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வாத்தி போஸ்டர்
'வாத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்தது. இதையடுத்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் ரிலீஸ் தேதியை படக்குழு குறிப்பிட்டுள்ளது.
My first single for this year #naadodimannan #banjara from #vaathi #sir @dhanushkraja @SitharaEnts #venkyatluri @adityamusic … let's go ?? pic.twitter.com/pPH8ZID4LS
— G.V.Prakash Kumar (@gvprakash) January 14, 2023