null
நவீன காலத்திற்கு ஏற்றார்போல் மாற வேண்டும்- அஸ்வின் குமார்
- நடிகர் அஸ்வின் குமார் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
- இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் அதன் பின்னர் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் நடித்த 'செம்பி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் அஸ்வின் குமார் சென்னையில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்தியன் டெரெய்ன் ஷோரூமை திறந்து வைத்துள்ளார். இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் அஷ்வின் குமாருடன் இணைந்து, இந்தியன் டெரெய்ன் நிர்வாக இயக்குனர் சரத் நரசிம்மன், தலைமை வர்த்தக அதிகாரி ஷெஹ்னாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின் குமார், "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்தியன் டெரெய்ன் ஸ்டோரை திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட காலமாக இந்த பிராண்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் என்ற முறையில், இந்த ஆடைகளின் தரம், ஸ்டைல், புதுமை ஆகியவை குறித்து எனக்கு நன்கு தெரியும். மேலும், இங்கு அனைவரும் விரும்பும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஏராளமான ஆடைகள் உள்ளன. இங்கு இந்த புதிய ஷோரூமை திறந்துள்ள இந்நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.