சினிமா செய்திகள்

உங்களுக்குதான் தமன்னா பிடிக்குமே.. ஷாக்கான அனிருத்.. குஷியான நெல்சன்

Published On 2023-07-04 03:04 GMT   |   Update On 2023-07-04 03:04 GMT
  • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
  • இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் வருகிற 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு காமெடியான புரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். 



Full View


Tags:    

Similar News