சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷ்

உதயநிதியுடன் ஓணம் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்

Published On 2022-09-08 20:45 IST   |   Update On 2022-09-08 20:46:00 IST
  • தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ்.
  • இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


மாமன்னன் படக்குழு

இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படக்குழுவினருடன் ஓணம் பண்டிகையை இன்று (08-09-2022) கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Tags:    

Similar News