null
மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு
- மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். .
- இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் ஆகிய மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்நிலையில் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை நடிகர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு, இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.