நா ரெடி தான் வரவா? லியோ டிக்கெட் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே தொடக்கம்..!
- லியோ படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் நடித்துள்ளனர்.
- சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் லியோ படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி லியோ படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 7-ம் தேதியில் இருந்து லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. இதனை பட வெளியீட்டு நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் தெரிவித்து இருக்கிறது.