சினிமா செய்திகள்

பிரித்விராஜ்

"மன்னிக்கவும்! தவறு நடந்துவிட்டது" - பிரித்விராஜ் வருத்தம்

Published On 2022-07-12 09:01 IST   |   Update On 2022-07-12 09:01:00 IST
  • இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் கடுவா.
  • மாற்றுத்திறனாளி ஆணையம் பிருதிவிராஜ் நடித்த கடுவா படத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிருதிவிராஜ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.


இந்த நிலையில் கடுவா படத்தில் "மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் இயக்குனர் ஷாஜி கைலாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


இது குறித்து ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை" என்று பதிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்து பிரித்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார், அதில் "மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News