பிரெஞ்ச் குத்துக்கு ரெடியான சந்தானம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிடி ரிட்டன்ஸ்’.
- இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டிடி ரிட்டன்ஸ் போஸ்டர்
ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'பிரெஞ்ச் குத்து' பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Bonjour boys and girls it's time for #FrenchKuthu !! ?♥️?
— Think Music (@thinkmusicindia) April 21, 2023
First single from #DDReturns from tomorrow 11AM!
An @ofrooooo musical ?
? @iamsanthanam @Surbhiactress@iampremanand @RKEntrtainment @dopdeepakpadhy @dineshashok_13 @onlynikil pic.twitter.com/s7hrhw9nJ5