சினிமா செய்திகள்

எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதைக்கு தான் நாயகன்- சந்தானம்

Published On 2023-07-19 08:34 GMT   |   Update On 2023-07-19 08:34 GMT
  • நடிகர் சந்தானம் தற்போது 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


இந்நிலையில், கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியதாவது, நல்ல கதை இருக்கு எனக்கான இடம் இருக்கிறது என்றால் படம் நடிப்பேன். தற்போது சினிமா மாறிவிட்டது. முன்னாடி காமெடி டிராக் என்று தனியா இருக்கும் பின்னர் காமெடியனும் ஹீரோவும் இணைந்து நடித்தனர், தற்போது மல்டி ஸ்டார் படம் என்பது ட்ரெண்டாகிவிட்டது. யாராக எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் கதைக்கு தான் நாயகன். கதை சரியாக அமைந்தால் அவர்கள் வெற்றி பெறலாம். ராஜேஷ் சரியான கதை அமைத்து அது இருவருக்கும் சரியாக இருந்தால் அது நிச்சயமாக வெற்றியடையும். இந்த படத்தில் சிரிப்பதற்கு தேவையான அனைத்து காமெடிகளும் இருக்கும் என்று பேசினார்.

Tags:    

Similar News