சினிமா செய்திகள்
null

சாதி கருத்தியலாக மட்டுமின்றி; கலாச்சாரமாகவும் வலுவடைந்து கிடக்கிறது.. மாமன்னன் படத்தை வாழ்த்திய திருமாவளவன்

Published On 2023-07-02 09:39 IST   |   Update On 2023-07-02 09:40:00 IST
  • மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
  • இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.



இந்நிலையில், 'மாமன்னன்' படம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பி-யுமான தொல்.திருமாவளவன் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது.



அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன். இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.



இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதயநிதி பதிவிட்டிருப்பது, மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, படத்தில் பேசப்பட்டுள்ள சமூக நீதி அரசியலை மேற்கோள்காட்டி உள்ளன்போடு வாழ்த்திய வி.சி.க தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு நம் படக்குழு சார்பில் என் அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News