சினிமா செய்திகள்

ஆஸ்கர் வெற்றிக்கு பிறகு கீரவாணி இசையமைக்கும் முதல் படம்- வைரமுத்து கொடுத்த அப்டேட்

Published On 2023-07-18 13:27 IST   |   Update On 2023-07-18 13:27:00 IST
  • 'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
  • 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.

1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றுகிறார்.


இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜென்டில்மேன்-2' திரைப்படத்தின் பாடல் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "கொச்சியில் இருக்கிறேன்

ஜென்டில்மேன் 2

படத்திற்குப் பாட்டெழுதுகிறேன்

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு

கீரவாணி(மரகதமணி)

இசையமைக்கும்

முதல் தமிழ்ப்படம்

அதிகாலைப் பறவைகளாய்ப்

பாடிக்கொண்டிருக்கிறோம்

கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார்

குஞ்சுமோன் படத்துக்குக்

குறையிருக்குமா பாட்டுக்கு?

விரைவில்

அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.





Tags:    

Similar News