சக மனிதனின் துயரம் நம் துயரம்- நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய வைரமுத்து
- புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
- நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் என தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். மேலும், நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "'தண்ணீர் தண்ணீர்
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது
வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்
விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்
பாதிக்கப்படாத நானும்
பங்கேற்கிறேன்
என் கடமையின் அடையாளமாக
முதலமைச்சரின்
பொது நிவாரண நிதிக்கு
ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்
பொருள்கொண்டோர்
அருள்கூர்க
சக மனிதனின் துயரம்
நம் துயரம்
இடர் தொடராதிருக்க
இனியொரு விதிசெய்வோம்;
அதை எந்தநாளும் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
'தண்ணீர் தண்ணீர்
— வைரமுத்து (@Vairamuthu) December 9, 2023
எங்கணும் தண்ணீர்
குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'
எனும் ஆங்கிலக் கவிதை
நினைவின் இடுக்கில் கசிகிறது
வீட்டுக்குத் தண்ணீர் இல்லை
என்பது சிறுதுயரம்
வீட்டுக்குள்ளேயே தண்ணீர்
என்பது பெருந்துயரம்
விடியும் வடியும் என்று
காத்திருந்த
பெருமக்களின் துயரத்தில்… pic.twitter.com/62GburnxT9