null
ஏகே 62-ல் கவனம் செலுத்தி வருகிறேன்.. விக்னேஷ் சிவன் பதிவு..
- அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே -62 படத்தில் நடிக்கவுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அஜித்
இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவ்ன் பதிவு
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், "எனது அடுத்த பெரிய வாய்ப்பான 'ஏகே 62' படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் பெரிய பொறுப்பினையளித்த அஜித், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன். வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்துவிடும்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.