null
எங்கள் மாணவர்கள் இனி பசியின்றி படிப்பார்கள்- விஜய் ஆண்டனி
- நடிகர் விஜய் ஆண்டனி பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
- இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இனிமேல் தங்கள் பள்ளிகளில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். இதுபோன்ற திட்டங்களில் தமிழ்நாடு கவனம் செலுத்தி வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இளம் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிப்பார்கள். அருமையான திட்டம். நன்றி மு.க.ஸ்டாலின் சார்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பள்ளியில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.