சினிமா செய்திகள்

உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து.. பெற்றோரை சந்தித்த விஜய்

Published On 2023-09-14 10:33 IST   |   Update On 2023-09-14 10:33:00 IST
  • நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
  • இப்படத்தின் பணிகளுக்காக விஜய் அமெரிக்கா சென்றார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.


கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.


இந்நிலையில், நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை சந்தித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் 'உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து' என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News