சினிமா செய்திகள்

ஜெய்

null

ஜெய் படத்தின் டிரைலர் வெளியானது

Published On 2022-07-24 11:25 GMT   |   Update On 2022-07-24 12:13 GMT
  • இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
  • 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'பகவதி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஜெய். இதையடுத்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2 என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்.

தற்போது இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.


எண்ணித் துணிக

இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'எண்ணித் துணிக' திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.  இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Full View


Tags:    

Similar News