சினிமா செய்திகள்
null
வெளியானது ஜெய் படத்தின் புதிய அப்டேட்
- இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'.
- 'எண்ணித் துணிக' திரைப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள படம் 'எண்ணித் துணிக'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
எண்ணித் துணிக
இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்தின் "ஏனடி பெண்ணே" பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.