தி கோட் vs ஓ.ஜி. அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
- தி கோட் படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்தனர்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.
இந்தப் படத்தின் முடிவில் இதன் அடுத்த பாகம் உருவாகலாம் என்பதை உணர்த்து்ம காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், இதுபற்றிய கேள்விகளுக்கு கற்பனை அடிப்படையில் தான் அப்படியான காட்சிகள் வைக்கப்பட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். ஆனாலும், எதிர்காலத்தில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தி கோட் படத்தின் அடுத்த பாகம் அதாவது தி கோட் vs ஓ.ஜி. (OG) படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "தி கோட் vs ஓ.ஜி. படம் குறித்த அப்டேட் 2026-ம் ஆண்டுக்கு பிறகு வெளியாகும்," என்று தெரிவித்தார்.
தி கோட் படத்தில் நடிகர் விஜயுடன் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, கோமல் ஷர்மா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.