`கல்கி 2898 ஏடி' படத்தின் டிரைலர் நாளை முதல்
- நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார்.
- படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர்.
நடிகர் பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.
படத்தில் புஜ்ஜி என ஒரு அதிநவீன கார் இடம்பெற்றுள்ளது, இதற்காக மகேந்திர நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஒரு நிஜ காரை வடிவமைத்துள்ளனர். இதனை பொதுமக்கள் பார்வைக்காக சென்னை மகேந்தரா சிட்டியில் வைத்துள்ளனர். இந்த புஜ்ஜி கதாப்பாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் புஜ்ஜி& பைரவா என்ற அனிமேடட் சிரீஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.