விடுதலை என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படங்களாக எப்போதும் இருக்கும்- நடிகர் சூரி
- சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.
- இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்தகட்ட முயற்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.
சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதிலும் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், விடுதலை 2 படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விடுதலை 1, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசனாக நடிப்பது என் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு சிறப்பு மற்றும் வரையறுக்கும் பாத்திரமாக இருக்கும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எனது தொலைநோக்கு இயக்குனர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு - உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க மாட்டேன்.
உங்கள் உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் என்றென்றும் நன்றி. நீங்கள் எனது மிகப்பெரிய பலம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.