சினிமா செய்திகள்
விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
- இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார்.
- இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு 'லவ் மேரேஜ்' என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படம் இது என்று இப்படம் குறித்து இயக்குனர் சண்முக பிரியன் தெரிவித்தார்.