OTT
null

'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் எப்போது?.. படக்குழு கொடுத்த நச் அப்டேட்!

Published On 2024-12-21 08:01 GMT   |   Update On 2024-12-21 08:52 GMT
  • தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது
  • படத்தின் மிக பிரபலமான கிஸிக் பாடலின் வீடியோ நேற்று வெளியானது.

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

 

படத்தின் மிக பிரபலமான கிஸிக் பாடலின் வீடியோ நேற்று வெளியானது. இந்நிலையில் புஷ்பா 2 ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் படக்குழு அதுகுறித்து மௌனம் கலைத்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், 'புஷ்பா 2' பட ஓடிடி ரிலீஸ் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. படத்தை பெரிய திரைகளில் கண்டு மகிழுங்கள். 56 நாட்கள் முடிவதற்கு முன் எந்த ஓடிடியிலும் 'புஷ்பா 2' வெளியாகாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News