முக்கிய விரதங்கள்

சந்திரோதய கவுரி விரதம்

Published On 2022-10-12 01:33 GMT   |   Update On 2022-10-12 01:33 GMT
  • சுபகாரிய தடைகள், குறிப்பாக திருமண தடைகள் நீங்கும்.
  • வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

புரட்டாசி மாதம் தேய்பிறை திருதியை தினத்தன்று சந்திரோதய கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். அதன்படி இன்று (புதன்கிழமை) மாலை சந்திரன் உதயமான பின்னர் இரவு 7 மணிக்கு பிறகு சந்திரனின் கிரகணங்கள் விழும் இடத்தில் அம்மனை வணங்க வேண்டும். ஒரு கலசத்தில் தேங்காய், மாவிலை வைத்து அலங்கரித்து, அதிலே அம்பாளை ஆவாகனம் செய்து, அம்பாளின் பக்தி பாடல்களை பாடி தூப தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.

கவுரியின் பெயரில் பல்வேறு விரத தினங்கள் ஒரு வருடம் முழுக்க கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கவுரி விரதத்தின் பலனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மனக் குழப்பங்கள் நீங்கும், தீர்மானங்களை விரைவில் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். சுபகாரிய தடைகள், குறிப்பாக திருமண தடைகள் நீங்கும்.

மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் அகலும். வாழ்க்கையில் எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

Tags:    

Similar News