முக்கிய விரதங்கள்
திருமணம் கை கூட செய்யும் ஹரிதாளிகா கவுரி விரதம்
- 8 தம்பதிகளிடம் வணங்கி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும்.
- இந்த விரதம் அனுஷ்டித்தால் பெண்கள் விரும்பும் நபருடன் திருமணம் நடக்கும்.
ஆவணி மாதம் வளர்பிறை திருதியை அன்று தேவியை வணங்கி செய்ய வேண்டிய விரதம் இது. திருமணம் நடைபெற வேண்டிய கன்னிப் பெண்கள், செவ்வாய்க்கிழமை மாலையில் தனது வீட்டில் விருஷபத்தின் மீது பார்வதியுடன் அமர்ந்திருக்கும் சிவன் படத்தை வைத்து பூஜை செய்து சிவஅஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து 16 தட்டுகளில் வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள், தேங்காய் வைத்து நிவேதனம் செய்து தெரிந்த மந்திரங்கள் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.
பிறகு அந்த 16 தட்டுகளையும் 8 தம்பதிகளுக்கு தந்து வணங்கி ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் பெண்கள் விரும்பும் நபருடன் திருமணம் செய்து கொண்டு சீரும் சிறப்புமாக சந்தோஷமாக வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.