வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை விரதம்
- இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
- ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும்.
முருகனை வழிபட செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள், கிருத்திகை நட்சத்திரம் சஷ்டி திதி உகந்தவை. கந்த சஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம்.
வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் எந்த கெட்ட சொற்களையும் பேச கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோவில் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு புற வெளிபிரகாரத்தில் மூலவர் கும்ப விமான தரிசனம் காணும் வகையில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியாக பார்த்தால் மூலவர் கும்ப விமானத்தை காணலாம். இங்கு அமைக்கப்பட்ட படியில் ஏறி நின்று பக்தர்கள் மூலவரின் கும்ப கலசத்தை பார்த்து வணங்கி செல்கிறார்கள்.