தைப்பூசம்: இன்று கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரத முறை...
- உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
- கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
தைப்பூச நாளான இன்று கட்டுப்பாடுகள் இல்லாத எளிய விரதத்தை கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியம், செல்வம் ஆகிய மூன்றும் தடையில்லாமல் கிடைக்கும் என்று கந்தபுராணம் சொல்கிறது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் திருநீறிட்டு ஓம் சரவணபவ என்ற முருகனின் மூல மந்திரத்தை குறைந்தது 12 முறை மனதார உச்சரிக்க வேண்டும். உப்பில்லா பலகாரம் எதுவானாலும் உண்ணலாம்.
கூடுமானவரையில் பால், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் பணியிடத்தில் இருந்து திரும்பியதும் அன்னை பார்வதி, முருகனுக்கு வேல் அளித்த கதையை படித்து நேரமிருப்பவர்கள் கந்தகுரு கவசமோ அல்லது கந்த சஷ்டி கவசமோ சொல்லலாம்.
அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கிவிட்டு இயன்ற அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இரவு சிறிது பால்சோறு சாப்பிடலாம். மறுநாள் காலை நீராடி, திருநீறு இட்டு முருகனின் மூல மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்து மனதார வணங்கி விரதத்தை நிறைவு செய்துவிட்டு வழக்கம்போல் உண்ணலாம்.