முக்கிய விரதங்கள்

வராஹியை எந்த கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்...

Published On 2022-07-08 07:15 GMT   |   Update On 2022-07-08 07:15 GMT
  • எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
  • பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம்.

நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாசனை மலர்கள் சாற்றி வாசனை தூபங்கள் ஏற்றி ஐம்புலன்களும் ஆன்மீகத்தில் ஒடுங்க வராஹி தேவியின் காயத்திரி மந்திரத்தை பஞ்சமி திதி பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து வர வேண்டும். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். பசும்பால் அல்லது இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். கண்டிப்பாக புளிப்பு இருக்கக்கூடாது.

என்னென்ன கிழமைகளில் வழிபட்டால் பலன்

ஞாயிறு கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபட்டால் நோய்கள் தீரும்.

திங்கட்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும்.

வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் விரதம் இருந்து வராஹியை வழிபடலாம்.

கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க சனிக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.

Tags:    

Similar News