ஆன்மிகம்
சென்னை தி.நகர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது
சென்னை தியாகராய நகர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. 7-ந்தேதி கருட வாகன ஊர்வலம் நடக்கிறது.
திருமலை-திருப்பதியில் வெங்கடேச பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடக்கும் போது சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திலும் பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மாலை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த பிரமோற்சவ விழா 11-ந்தேதி வரை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டு, பெருமாள் சேஷ வாகனத்தில் காட்சியளித்தார்.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தேவஸ்தான கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் பெருமாளை பய பக்தியுடன் வணங்கினர். இன்று(செவ்வாய்க்கிழமை) பெருமாள் ஹம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட வாகன ஊர்வலம் 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஊர்வலம் தேவஸ்தானம் அமைந்துள்ள வெங்கடநாராயண சாலை, ராமானுஜம் தெரு, தண்டபாணி தெரு, சவுந்தரராஜன் தெரு ஆகியவற்றின் வழியாக செல்கிறது. இந்த ஊர்வலத்துடன், பரதநாட்டியம், விஷ்ணு வேதமந்திரங்கள் ஓதுதல் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் நடக்கவுள்ளது.