ஆன்மிகம்
திருவொற்றியூர் கோவிலில் திருக்கல்யாண விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வடிவுடையம்மன் கோவிலில் கல்யாணசுந்தரர்-வடிவுடையம்மன் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் கல்யாணசுந்தரர்-வடிவுடையம்மன் திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை நடந்தது.
பின்னர் வசந்த மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உற்சவர் கல்யாண சுந்தரர்-வடிவுடையம்மன் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது பக்தர்கள் மலர் தூவி பக்தி கோஷமிட்டனர். விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்ததால் கோவில் வளாகத்தில் போதிய இடம் இல்லை. இதனால் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோவிலுக்குள் இருந்த பக்தர்கள், சாமி தரிசனம் முடிந்து வெளியேறிய பிறகு, வெளியே நிறுத்தப்பட்டு இருந்த பக்தர்கள் அனைவரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில் பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடைபெற்றது. சன்னதி தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து தெற்குமாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வந்து சன்னதி தெருவுக்கு வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து இரவில், கல்யாணசுந்தரர்-வடிவுடையம்மனுக்கு மகிழ மரத்தடியில் கொழுந்தீஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது.
இதை காண சென்னை பவளக்கார தெருவில் இருந்து நகரத்தார் தங்கள் தெய்வமான பழைய தண்டபாணி மற்றும் புதிய தண்டபாணி சாமிகளை அலங்கரித்து தேரில் வைத்து பக்தி பாடல்களை பாடியபடி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்தனர். இவர்கள், திருவொற்றியூர் தெற்கு மாடவீதியில் தங்கி இருந்து 5 நாட்கள் விழாக்களில் பங்கெடுத்து பிறகு, மீண்டும் புறப்பட்டு செல்வது வழக்கம்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.