ஆன்மிகம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

Published On 2021-07-08 14:34 IST   |   Update On 2021-07-08 14:34:00 IST
கோவில் திறக்கப்பட்டதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், கோவை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு உள்ளன.

கோவையில் பிரசித்தி பெற்ற  ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த கோவில் திறக்கப்பட்டதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Similar News