வழிபாடு

பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றினால்...

Published On 2022-06-20 13:30 IST   |   Update On 2022-06-20 13:30:00 IST
  • பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும்.
  • மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும்.

பிரம்ம முகூர்த்தம் என்பது, அதிகாலை நேரமான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டமாகும். இந்த நேரத்தில் எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவது என்பது மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜை மற்றும் ஹோமங்களுக்கு நல்ல நாள் பார்க்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது இறைவனுக்கான நேரம் என்பதால் அந்த நேரத்திற்கு தீட்டு எதுவும் கிடையாது. பிரம்ம முகூர்த்த வேளையில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வங்களை வழிபாடு செய்தால், வீட்டில் சர்வ மங்களமும் கிடைக்கப்பெறும்.

தினமும் காலையில், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து திருநீறு இட்டு இறைவனை வேண்டி வாங்கி வந்தால் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் கூறுவதுண்டு.

பின்னர், வாசலில் அரிசி மாவுக்கோலமிடுவது சிறந்தது. அடுத்து பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னதாகவே விளக்கேற்ற வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னதாகவே விளக்கேற்றி வழிபடவேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில், வீட்டில் விளக்கேற்றி வைத்து, சிவ மந்திரம் சொல்லலாம். அப்படி சொல்லச் சொல்ல, உள்ளுக்குள்ளேயும் வீட்டினுள்ளேயும் நல்ல அதிர்வுகள் பரவும். அதனால், நேர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

Tags:    

Similar News