வழிபாடு
மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா தொடங்கியது
- இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய 10 நாள் திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் நடந்த திருப்பலிக்கு சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் காட்வின் சவுந்தர்ராஜ் மறையுரையாற்றினார். இதில் விழா நிகழ்வை பங்கு அருட்பணி பேரவையினர், அன்பிய ஒருங்கிணையத்தினர், திருத்தூதுக்கழக ஒருங்கிணையத்தினர் சிறப்பித்தனர்.
இதில் ஊர் தலைவர் ஆன்றனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், பொருளாளார் ஆரோக்கிய வினோத், துணை செயலாளர் கிறிசில்டா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மறவன்குடியிருப்பு பங்குதந்தை ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.