மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி மாலையில் ஜெபமாலை நடந்தது. அதைத்தொடர்ந்து திருவிழா கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெற்றது. திருப்பலிக்கு கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். செட்டிச்சார்விளை பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் மறையுரையாற்றினார். கார்மல் நகர் பங்குதந்தை சகாய பிரபு, புனித ஜெரோம் கல்லூரி அருட்பணியாளர் பாஸ்டின் சஜு கலந்து கொண்டனர்.
நேற்றைய நிகழ்ச்சிகளை பங்கு அருட்பணிப்பேரவை, அன்பிய ஒருங்கிணையம், திருத்தூதுக்கழக ஒருங்கிணையம் ஆகியவை சிறப்பித்தன.
இதில் பங்குத்தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஊர் தலைவர் ஆன்றனி எட்வின், செயலாளர் பால் வின்ஸ்டன், துணை செயலாளர் கிறிஸ்ல்டா, பொருளாளர் ஆரோக்கிய வினோத் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.