கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
காரமடை புனித மகதலா மரியா ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 22-ந்தேதி திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை நடக்கிறது.
- 23-ந்தேதி ஆடம்பர தேர் பவனி நடக்கிறது.
கோவை மாவட்டம் காரமடை அருகே புனித மகதலா மரியா ஆலயத்தில் 3-ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட்பணி அருண் திருப்பள்ளி முடித்து கொடியேற்றத்தை தொடங்கி வைத்தார். இதில் காரமடை கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் மனோஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தொடர்ந்து வரும் 19, 20-ந் தேதிகளில் கொமாராப்பாளையம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மரிய ஆண்டனி தலைமையில் திருப்பலி, மறையுரை, நவநாள், நற்கருணை ஆராதனை நடக்கிறது. 22-ந் தேதி மைலேரிபாளையம் ஜோசப்ராஜ் தலைமையில் திருப்பலி, மறையுரை, நவநாள், நற்கருணை ஆராதனை நடக்கிறது.
23-ந் தேதி சிறப்பு கூட்டு திருப்பலியுடன் முதற்கருணை மற்றும் உறுதி பூசுதல் அருட்சாதனம் வழங்கும் விழா நடக்கும். இதற்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ்அக்குவினாஸ் தலைமையில் மாலை 5.30 தேர் சிறப்பு திருப்பலி நடைபெறும். இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் வட்டார முதன்மை குரு மற்றும் வட்டார குருக்கள் தலைமையில் தோழமை குருக்கள் டேவிட் மாலை 7 மணிக்கு ஆடம்பர தேர் பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பேரவை பங்குத்தந்தை சிஜீ செய்து வருகிறார்.