வழிபாடு

நாகூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
- சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு பலர் சந்தனம் பூசினர்.
- இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர் யூசுப் நெய்னா தெருவில் சுல்தான் கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நேர தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. தொடர்ந்து சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு, தர்கா டிரஸ்டி ஷேக் ஹஸன் சாஹிப் உள்ளிட்ட பலர் சந்தனம் பூசினர்.
இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.