வழிபாடு
- பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம்.
- புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.
பழனி உலகப்புகழ் பெற்ற ஆன்மிக திருத்தலம். பழனி "இயற்கை எழில்" ததும்பும் புண்ணிய பூமி. பழனி ஆண்டவனின் அருளைப்பெற நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களின் பழனி "திருத்தலப் பயணம்" பாவங் களைப் போக்கி நல்வினையைக் காட்டுகின்றது. ஆன்மிக பூமியான பழனி திருத்தலத்தில் புகழ்பெற்ற புண்ணிய நதியான சண்முகநதி ஓடுகிறது.
சண்முகநதியில் புனித நீராடி பழனி ஆண்டவனை வழிபட்டால் இம்மையிலும் மறுமையிலும் வீடுபேறு கிட்டும்.