வழிபாடு
காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரம்
- ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.
- சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலய ராஜகோபுரம் முன்பு சுமார் 12 அடி உயரம் உள்ள ராஜகோபுர ஆறுமுக பெருமான் உள்ளார்.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆடிக்கிருத்திகையை ஒட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இவ்விழாவில் காஞ்சீபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டனர்.