பக்தர்கள் தியானம் செய்ய விரும்பும் ரமண மகரிஷியின் ஆசிரமம்
- ரமண மகரிஷியின் தெய்வீக போதனைகள் பலரை ஈர்த்தன.
- பல லட்சம் பக்தர்கள் இவருடைய சீடர்களாக இருந்தனர்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் மதுரை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்தவர். இவருடைய அசல் பெயர் வேங்கட ரமணா. இவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு தாயுடன் மதுரையில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்பொழுது அவருக்கு மிகவும் சிறிய வயதாக இருந்தது.
இங்கு தான் அவர் மாமாவின் வீட்டிற்கு திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பரை சந்தித்தார். மாமாவின் நண்பர் திருவண்ணாமலை பற்றி கூறிய சில விஷயங்கள் இவரை ஈர்த்தது. இவர் அருணாச்சலேஸ்வரரை காண திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் குடியேறியது.
விரைவில் அவர் தன் தாயாருடன் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றடைந்தார். இங்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுகொண்டுள்ளதால் பல நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் இருந்தார். இவருடைய தெய்வீக போதனைகள் பலரை ஈர்த்தன.
அவர் 58 வருடத்தில் நிர்வாண அடைந்த சமயம் பல லட்சம் பக்தர்கள் இவருடைய சீடர்களாக இருந்தனர். இன்றும் இவருடைய தீவிர பக்தர்கள் இவர் அருளாசி பெற திருவண்ணாமலையில் உள்ள இவருடைய ஆசிரமத்திற்கு வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவருடைய பல பக்தர்கள் குறிப்பாக சிவராத்திரியன்று இவர் ஆசிரமத்திற்கு வருவதுண்டு.
ரமண மகரிஷி மக்கள் மத்தியில் அவர் இறந்த பின்பும் அவருடைய சிந்தனைகள் மற்றும் ஆன்மீக சக்தியால் பக்தர்களிடையே அவர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.
ரமண மகரிஷியின் சமாதி மீது அழகிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதன் மேல் ஓர் விமானம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நான்கு தூண்களும் சலவைகற்களால் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் நடுப்புறத்தில் வெள்ளை நிற பளிங்கினால் செய்த அழகிய தாமரை அலங்கரிக்கிறது. இந்த அழகிய தாமரையின் மேல் சிவலிங்கம் அமர்த்தப்பட்டு மிகவும் கம்பீர தோற்றமளிக்கிறது. இந்த சமாதியில் மேலும் ஒரு பெரிய அளவில் தியானமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் இங்கு அமர்ந்து சவுகரியமாக தியானம் செய்ய வசதியாக உள்ளது. இதனை அடுத்துள்ள பழைய மண்டபத்தில் தான் ரமண மகரிஷி தன் கடைசி நாட்களை தியானத்தில் கழித்தார். நீண்ட நேரம் தியானத்தில் உட்காரும் பக்தர்கள் அனைவரும் இந்த பழைய மண்டபத்தை தான் விரும்புவார்கள்.