தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.16 லட்சம் பீர் பாட்டில்கள் பறிமுதல்
- பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
- மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.
பெங்களூர்:
கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நாயனகோளி செக்போஸ்ட் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தியபோது அதில் 1100 பீர் பெட்டிகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.
மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. மது பாட்டில் கொண்டு வந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.16 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 சரக்கு வாகனங்களில் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.10.77 லட்சம் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர்.