மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி
- காங்கிரஸ் வேட்பாளர்கள் முறையே 47, 46, 46 என வாக்குள் பெற்று வெற்றி பெற்றனர்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் காங்கிரஸ்க்கு ஆதரவாக வாக்களித்தார்.
மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல் இன்று நடைபெற்றது. போட்டி ஏற்பட்டுள்ள கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மூன்று பேரையும், பா.ஜனதா தலைமையில் ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரை நிறுத்தியது. இதனால் போட்டி ஏற்பட்டது.
பா.ஜனதா ஒரு இடத்தில் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.-க்கள் போதுமான வகையில் இருந்தனர். 2-வது வேட்பாளராக மதசார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியை நிறுத்தியது. 2-வது வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற ஒரு வாக்கு மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது.
பா.ஜனதா எம்.எல்.எ.ஏ சோமசேகர் என்பர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனால் மதசார்பற்ற ஜனதா கட்சியின் வேட்பாளர் தோல்வி உறுதியானது.
ஜிசி சந்திரசேகர்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், ஜிசி சந்திரசேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பா.ஜனதா சார்பில் நாராயண்சா கே. பண்டேகே வெற்றி பெற்றார்.
சையத் நசீர் ஹுசைன்
அஜய் மக்கானுக்கு 47 எம்.எல்.ஏ.-க்களும், சையத் நசீர் ஹுசைனுக்கு 46 எம்.எல்.ஏ.-க்களும், ஜிசி சந்திரசேகருக்கு 46 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருந்தனர்.