வணிகம் & தங்கம் விலை

காலையில் குறைந்த தங்கம் விலை தற்போது உயர்வு

Published On 2025-03-06 13:27 IST   |   Update On 2025-03-06 13:27:00 IST
  • காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
  • சர்வதேச அளவில் பொருளாதரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையான நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.

காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News