வணிகம் & தங்கம் விலை

ரூ.4,455 கோடி: ஒரே நிதியாண்டில் 120% அதிக வருவாய்.. அசுர வளர்ச்சி கண்ட Zepto நிறுவனம்

Published On 2024-12-15 05:46 GMT   |   Update On 2024-12-15 05:46 GMT
  • இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
  • கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.

ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பலசரக்கு டெலிவரி நிறுவனமான செப்டோ [Zepto] - உடைய வருவாய் நடப்பு நிதியாண்டில் 120 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.2,026 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் அது ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது.

செப்டோ தனது ஊழியர்களுக்காக இந்த நிதியாண்டு ரூ.426.30 கோடி செலவிட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட  ரூ.263.45 கோடியை 62% அதிகமாகும்.

ரூ.492.65 கோடியை கிடங்குகளுக்காக செலவிட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.344.79 கோடியை விட  43% அதிகமாகும்.

விளம்பரங்களுக்கு ரூ.303.5 கோடி செலவிட்டுள்ளது, முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ 215.8 கோடியிலிருந்து செலவு விகிதம் 41% அதிகரித்துள்ளது.

 

மொத்தமாக செலவுகள் கடந்த நிதியாண்டில் ரூ 3,350 கோடியாக இருந்தது. அதுவே இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் செப்டோவின் செலவினங்கள் அதிகரித்துள்ளபோதிலும் அதிக லாபம் காரணமாக நிறுவனத்தின் நஷ்டம் [நிகர இழப்பு] 2% வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.

இந்த தரவுகளை செப்டோ தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா இந்த நிதி அறிக்கையை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

Tags:    

Similar News