ஆடி மாதம்: காசிமேட்டில் மீன் விலை குறைந்தது
- கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின.
- காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ராயபுரம்:
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் கரைதிரும்பின. இதனால் மீன்கள்வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.
மேலும் கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மீன்வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் ரூ.200-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.
காசிமேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
வஞ்சிரம் - ரூ.900
வவ்வால் மீன் - ரூ.500
சைனீஸ் வவ்வால் - ரூ.1300
சங்கரா - ரூ.200
ஷீலா - ரூ.200
இறால் - ரூ.400
கடமா - ரூ.400
நண்டு - ரூ.300
சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை.