உள்ளூர் செய்திகள்

VAO-வை அறைக்குள் வைத்து பூட்டி சென்ற உதவியாளர்

Published On 2024-12-17 05:38 GMT   |   Update On 2024-12-17 05:43 GMT
  • பணியின் போது ஏற்பட்ட மோதலால் அலுவலகத்தில் வைத்து பூட்டி சென்றார்.
  • தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தில் சங்கீதா என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு இடையே பணியின் போது ஏற்பட்ட மோதலால் நேற்று கிராம நிர்வாக அலுவலர் தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அப்போது தமிழரசி , உதவியாளர் சங்கீதாவை பார்த்து கதவைத் திறந்து விடு. இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்வேன் என எச்சரிக்கை செய்தும் உன்னால் முடிந்ததை பார் என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் உதவியாளர் சங்கீதா.

இதனைத் தொடர்ந்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பூட்டி இருந்த கதவை திறந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News