உள்ளூர் செய்திகள்

சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2024-09-18 00:46 GMT   |   Update On 2024-09-18 01:05 GMT
  • போலீசார் நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
  • இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவர் மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அடிக்கடி சிறைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ஸ்டாலின் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு போலீசாருக்கு போக்கு காட்டி வந்துள்ளார். கடைசியாக வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். காக்கா தோப்பி பாலாஜியை நெருங்கியபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் தனிப்படை போலீசார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அத்துடன் போலீஸ் வாகனம் மீது குண்டு பாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் காக்கா தோப்பு பாலாஜி நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த 2-வது என்கவுண்டர் இதுவாகும்.

Tags:    

Similar News