ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்களுக்கு தடை
- கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் நடவடிக்கை
கரூர்,
தீபாவளி பண்டி கையை முன்னிட்டு கரூர் மாநகரில் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, கரூர் வர்த்தக மையங்களான ஜவஹர் பஜார், கோவை ரோடு, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை ஆகிய பகுதிகளுக்கு தீபா வளி சம்பந்தமான பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் 5 வந்து செல்வார்கள். இதிலும், தீபா வளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு
முன்னரே. வந்து செல்லும் மக்க ளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சமயங்க ளில் கனரக வாகனங்கள் உள்ளே சென்று, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் மாநகரின் நுழைவுவாயில் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையி மாநகரின்லும் உள்ளே செல்ல தடை என்ற வாசகங்கள் அடங்கிய பதாதை களை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாட்களில் அதிகளவு வாகனங்கள் வரத்து காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்ப டாதவகையில் போலீசார்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.