கிருஷ்ணாபுரம் அருகே தனியார் பேருந்து மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி
- செங்கல் மேடு பகுதியில் வந்த போது தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து உள்ளானது.
- பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 20. இவர் இன்றுகாலை இருசக்கர வாகனத்தில் தன்னுடைய உறவினரை தருமபுரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கல் மேடு பகுதியில் வந்த போது தனியார் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து உள்ளானது. இதில் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.